திருநெல்வேலி மணிமண்டபத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அ.பெருமாள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
Regional01

வ.உ.சி. நினைவு தினம் அனுசரிப்பு

செய்திப்பிரிவு

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 84-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. திருநெல் வேலி மாநகராட்சி பொருட்காட்சி திடலில் உள்ள வ.உ.சிதம்பரனார் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அ.பெருமாள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாறு குறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எம்.எஸ்.மகாகிருஷ்ணன், வட்டாட்சியர் பகவதிபெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஓட்டப்பிடாரம்

அதிமுக சார்பில் மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் மோகன் தலைமையிலும், திமுக சார்பில் சண்முகையா எம்எல்ஏ தலைமையிலும், அமமுக சார்பில் வடக்கு மாவட்டச் செயலாளர் சிவபெருமாள் தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் வ.உ.சிதம்பரனார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. வ.உ.சி குறித்த விநாடி-வினா போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தென்காசி

தூத்துக்குடி

SCROLL FOR NEXT