காஞ்சி மாவட்டத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 26,823 ஆக இருந்தது. நேற்று செய்த பரிசோதனையில் 76 பேருக்கு கரோனா இருப்பது தெரிந்தது.
இதையடுத்து கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 26,899 ஆக உயர்ந்தது. இவர்களில் 26,007 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 81 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
செங்கை மாவட்டத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை46,034 ஆக இருந்த நிலையில், நேற்று செய்த பரிசோதனையில் மேலும் 112 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து இம்மாவட்டத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 46,146 ஆக உயர்ந்தது. இவர்களில் 45,536 பேர் குணமாகினர். நேற்று மட்டும் 117 பேர் வீடு திரும்பினர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், நேற்று முன் தினம்வரை 39,700பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று செய்த பரிசோதனையில் 97 பேருக்கு கரோனாஇருப்பது தெரிந்தது.
இதையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39,797ஆக உயர்ந்தது. இவர்களில் 38,420 பேர் குணமடைந்துள்ளனர், நேற்று மட்டும் 121 பேர் வீடு திரும்பினர்.