திருக்கழுக்குன்றம் ஒன்றியம் வாயலூர் ஊராட்சிக்கு உட்பட்டஐந்துகாணி பகுதியில் ஏராளமான இருளர் இன மக்கள் வசிக்கின்றனர். இவர்கள், தங்களின் பல்வேறு தேவைகளுக்காக பக்கிங்ஹாம் கால்வாயை கடந்துஉய்யாலிக்குப்பம் வழியாக புதுப்பட்டினம், கல்பாக்கம் நகரப்பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கனமழையால் பக்கிங்ஹாம் கால்வாயில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், உய்யாலிகுப்பம் - ஐந்துகாணி இடையிலான சாலை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
மேலும், இருளர் மக்களின் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால், நிவாரண உதவிவழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, "பக்கிங்ஹாம் கால்வாய் மூலம் மழை வெள்ளம் தடையின்றி கடலுக்கு செல்லும்வகையில், கடலின் முகத்துவாரத்தில் இருந்து மண் அகற்றப்பட்டுள்ளதால் இருளர் மக்களின்குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீர் வடியத் தொடங்கியுள்ளது.
மேலும், இருளர் மக்களின் போக்குவரத்துக்காக தண்ணீரில் மூழ்கிய சாலையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றனர்.