சேலம் அருகே உள்ள கெங்கை வல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (52). நெய்வேலி என்எல்சி 2-வது அனல்மின் நிலைய6-வது யூனிட்டில், இன்கோசர்வ் தொழிலாளியாக பணியாற்றும் இவர், நெய்வேலி புதுநகர் 29-வது வட்டம் பகுதியில் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த சக்திவேல், எதிர் பாராத விதமாக நிலக்கரி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்டில் சிக்கினார். சத்தம் கேட்டு சக ஊழியர்கள் ஓடி வந்தனர். அவர்களால் சக்திவேலை காப்பாற்ற முடியவில்லை. தகவல் அறிந்த என்எல்சிஉயர் அதிகாரிகள் சம்பவ இடத் துக்கு சென்று பார்வையிட்டனர். நெய்வேலி தெர்மல் போலீஸார் உடலை கைப்பற்றி, பிரேத பரி சோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.