மழை காரணமாக தமிழகத்தில் மின் தேவை குறைந்ததால், தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3 அலகுகளில் 630 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மின் தேவை வெகுவாக குறைந்துள்ளது. இதனால், அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தியை குறைத்து, நிலக்கரியை சேமிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
அதன் அடிப்படையில், தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2, 3 மற்றும் 5-வது அலகுகள் நிறுத்தப்பட்டதால் 630 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது, 1 மற்றும் 4-வது அலகுகள் மட்டுமே இயங்குகின்றன. மின் தேவை அதிகரிக்கும்பட்சத்தில் நிறுத்தப்பட்டுள்ள அலகுகள் உடனடியாக இயக்கப்படும் என, அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.