விருதுநகரில் நேற்று திருநங்கைகளுக்கு பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணையை வழங்கிய மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன். 
Regional02

விருதுநகரில் திருநங்கைகளுக்கு பசுமை வீடுகள் ஆட்சியர் வழங்கினார்

செய்திப்பிரிவு

விருதுநகரில் திருநங்கைகளுக்கு பசுமை வீடு கட்டுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் நேற்று வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் தலைமை வகித்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் 6 திருநங்கைகளுக்கு தலா ரூ. 2.10 லட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினார்.

மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 10 பேருக்கு தலா ரூ.30 ஆயிரம் மதிப்பிலான 3 சென்ட் நிலப்பரப்பளவு கொண்ட இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ஆட்சியர் இரா. கண்ணன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஜெயக்குமார், சிவகாசி சார் ஆட்சியர் ச.தினேஷ்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT