மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 7 லட்சம் முறைகேடு செய்த 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், காமராஜர் நகரைச் சேர்ந்தவர் சிவக் குமார் (45). மதுரை பழங்காநத்தம் பட்டுராணி தெருவைச் சேர்ந்தவர்கள் ரமேஷ்கண்ணன் (54), அவரது மனைவி மற்றும் ரமேஷ்கண்ணனின் சகோதரர் பால்ராஜ். மூவரும், கடந்த பிப்ரவரியில் சிவக்குமாரைச் சந்தித்தனர். அப்போது, மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சிவக்குமாரிடம் இருந்து ரூ.7 லட்சத்தை பெற்றனர். ஆனால், கூறியபடி வேலை வாங்கித் தரவில்லை. இது தொடர்பாக சிவக்குமார் அளித்த புகாரின்பேரில் சுப்பிர மணியபுரம் போலீஸார் ரமேஷ்கண்ணன் உட்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.