மதுரை மாவட்டம், சமயநல்லூர் மின்கோட்டச் செயற்பொறியாளர் ச. ஆறுமுகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வாடிப்பட்டி, கொண்டயம்பட்டி, அய்யங்கோட்டை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (நவ.19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும். இதனால் வாடிப்பட்டி, கொண்டயம்பட்டி, அய்யங்கோட்டை துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட வாடிப்பட்டி, அங்கப்பன் கோட்டம், சொக்கலிங்கபுரம், கச்சைகட்டி, குலசேகரன் கோட்டை, குட்லாடம்பட்டி, குட்டிகரடு, மேட்டு நீரேத்தான், பெருமாள்பட்டி, சாணாம்பட்டி, ஆண்டிபட்டி, வடுகபட்டி, திருமால்நத்தம், ராயபுரம், டி.மேட்டுப்பட்டி, கரடிக்கல், கெங்கமுத்தூர், நாராயணபுரம்,
ராமகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதியில் மின் தடை ஏற்படும்.