சேலம் மாநகராட்சி சார்பில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கொண்டலாம்பட்டியில் குடிசை பகுதி மக்களுக்கு இலவசமாக முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
முகக் கவசத்தை மாநகராட்சி ஆணையர் என்.ரவிச்சந்திரன் வழங்கினார். ஒருவருக்கு இரண்டு துணியால் தயார் செய்யப்பட்ட முகக் கவசம் வழங்கப்பட்டன. இதுதொடர்பாக ஆணையர் என்.ரவிச்சந்திரன் கூறும்போது, “அடுத்த கட்டமாக சேலம் மாநகரின் அனைத்து பகுதிகளிலும் உள்ள குடிசை பகுதி பொதுமக்களுக்கு, இலவசமாக ஒருலட்சம் முகக் கவசங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார். நிகழ்ச்சியில், மாநகர நல அலுவலர் பார்த்திபன், உதவி ஆணையர் ரமேஷ் பாபு, சுகாதார அலுவலர் ரவிசந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.