Regional02

ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க காவல் துறை நடவடிக்கை

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர், தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஸ்குமார் ஆகியோர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:

காவல்துறை சார்பில் ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைப் பல்வேறு மக்கள் தங்களது வாழ்க்கையின் வளர்ச்சிப் பாதைக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் சிலரின் அதீத ஆசையால், திரைப் படங்களைப் பார்த்து உடனடியாக பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என்ற காரணத்தால், ஆன்லைன் சூதாட்டம் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். இதன் விளைவாக தற்கொலை சம்பவங்கள் நிகழ்கின்றன. பெற்றோர்கள் பலர் தங்களது குழந்தைகளுக்கு செல் போன் கொடுத்துவிட்டால், அமைதியாக இருக்கிறார்கள் என்ற நோக்கில் கொடுக்கிறார்கள். அவர்கள் அதை எப்படி பயன்படுத்துகிறார்கள் என கவனிப்பதில்லை. பெற்றோர் விளையாடினாலும் சரி, குழந்தைகள் விளையாடினாலும் சரி இழப்பு அந்த குடும்பத்துக்கே. எனவே, நீங்களும் ஆன்லைன் சூதாட்டங்களை விளையாடாதீர்கள், உங்கள் குழந்தைகளை யும் செல்போனில் விளையாட அனுமதிக்காதீர்கள். இவ்வாறு எஸ்பி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT