Regional01

திமுக மகளிரணி பயிற்சி பாசறை

செய்திப்பிரிவு

தென்காசி தெற்கு, வடக்கு மாவட்ட திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணியினருக்கு சமூக ஊடக பயிற்சி பாசறைக் கூட்டம் தென்காசியில் நடைபெற்றது. மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் தலைமை வகித்தார். திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.

மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் சிவ பத்மநாதன், துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மாணவரணி துணைச் செயலாளர் ஷெரிப், மாவட்ட பொருளாளர் ஷேக் தாவூது, துணைச் செயலாளர் பேபி ரஜப் பாத்திமா, நகரச் செயலாளர் சாதிர் உட்பட பலர் கலந்துகொண்டனர். மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஆரோக்கிய எட்வின் பயிற்சி அளித்தார்.

SCROLL FOR NEXT