Regional01

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். கடுமையான ஊனம் உள்ளவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். தனியார் துறை வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

சங்க மாவட்ட துணைத் தலைவர் நாகராஜன், செயலாளர் குமாரசாமி தலைமை வகித்தனர். நிர்வாகிகள் காசி, இசக்கி, சங்கரசுப்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுபோல் மாவட்டத்தில் 15 இடங்களில் இச்சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

SCROLL FOR NEXT