திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை பலர் தங்களது வாழ்க்கையின் வளர்ச்சிப் பாதைக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் சிலர் திரைப்படங்களை பார்த்து உடனடியாக பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என்று எண்ணி ஆன்லைன் சூதாட்டம் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். இதன் விளைவாக தற்கொலை சம்பவங்கள் நடைபெறுகின்றன. பெற்றோர்கள் பலர் தங்களது குழந்தைகளுக்கு செல்போன் கொடுத்துவிட்டால் அமைதியாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால் அவற்றை அவர்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்று கவனிப்பது இல்லை. ஆன்லைன் சூதாட்டத்தில் யார் ஈடுபட்டாலும் இழப்பு குடும்பத்துக்கே. தமிழக காவல்துறை சார்பில் ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆன்லைன் சூதாட்டத்தில் பெற்றோரும் ஈடுபடக்கூடாது. குழந்தைகளையும் விளையாட அனுமதிக்க கூடாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.