மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நுழைவு வாயிலில் நேற்று முற்றுகையிட்ட முத்துக்குமரனின் உறவினர்கள்.(உள்படம்) முத்துக்குமரன்படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி 
TNadu

பார்வர்டு பிளாக் நிர்வாகி கொலை

செய்திப்பிரிவு

மதுரை மாவட்டம் மேலூர் அருகேவெள்ளரிப்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமரன்(37). இவர் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மதுரை தெற்கு மாவட்டச் செயலராக இருந்தார். இவர் தனது வயலில் கோழிப் பண்ணை நடத்தி வந்தார். இங்கு யாகப்பா நகரைச் சேர்ந்த மாரியப்பன் உள்ளிட்ட அவரது நண்பர்கள் அடிக்கடி வந்து மது அருந்துவது வழக்கம்.

இந்நிலையில், தீபாவளியையொட்டி நேற்று முன்தினம் மாரியப்பன் உள்ளிட்ட அவரது நண்பர்கள் 5 பேர் முத்துக்குமரனின் பண்ணையில் மது அருந்திவிட்டு இரவில் அங்கேயே தங்கி உள்ளனர். இதை, முத்துக்குமரன் கண்டித்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் முத்துக்குமரனை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பினர்.

மேலூர் போலீஸார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். டிஎஸ்பி தலைமையிலான தனிப்படை போலீஸார் கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.

முத்துக்குமரனின் உறவினர்கள், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே மறியலில் ஈடுபட்டனர். பின்னர், போலீஸாரின் சமாதானத்தை ஏற்று கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT