Regional02

பணியின்போது மின்சாரம் பாய்ந்து காயமடையும் தொழிலாளர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மின்சார வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்கச் செயலாளர் அ.சரவணன், தமிழக முதல்வருக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில், "மின்வாரியத்தில் பணிகளின்போது மின்சாரம் பாய்ந்து அடிக்கடி தொழிலாளர்கள் பாதிக்கப்படுவது தொடர்கிறது. பாதிக்கப்படும் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் நிரந்தர தொழிலாளர்களுக்கு எந்தவித மருத்துவ உதவியும், நிவாரணமும் கிடைப்பதில்லை.

நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் மின் பகிர்மான வட்டம் கொல்லிமலை - 2 சோளக்காடு உதவி மின்பொறியாளர் அலுவலகத்துக்கு உட்பட்ட படசோலை அருகே கடந்த மாதம் 15-ம் தேதி பணியின்போது மின்சாரம் பாய்ந்து, ஒப்பந்த தொழிலாளி பெரியசாமி பலத்த தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் நிகழ்ந்து ஒரு மாதத்துக்கு மேலாகியுள்ள நிலையில், தற்போது வரை உரிய தொடர் சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை. தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். உயர் அதிகாரிகளின் கவனக்குறைவால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. படுகாயமடைந்த ஒப்பந்த தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கவும், சிகிச்சை கிடைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியின்போது காயமடையும் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம், தொடர் சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT