Regional01

உண்டியலில் திருட்டு ஓய்வு பெற்ற போலீஸ்காரர் கைது

செய்திப்பிரிவு

திருச்செங்கோடு அருகே கள்ளுப்பாளையத்தில் முனியப்பன் கோயில் உள்ளது. கோயிலில் உள்ள உண்டியலில் அடிக்கடி பணம் திருட்டு நடந்து வந்துள்ளது. இதை தடுக்கும் வகையில் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருந்தது.

அதிர்ச்சியடைந்த கோயில் நிர்வாகத்தினர் அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்தபோது, அதில் ஒரு நபர் வந்து உண்டியலை உடைத்து பணம் எடுப்பது பதிவாகியிருந்தது. இதுகுறித்து திருச் செங்கோடு புறநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ்காரர் அத்தியப்பன் (62) உண்டியல் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT