குறிஞ்சிப்பாடி அருகே உள்ள சின்னதானங்குப்பத்தில் வீட்டில் மழை நீர் புகுந்துள் ளது. 
Regional02

கடலூர் மாவட்டத்தில் கனமழை

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் நேற்று முன்தினம் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. குறிஞ்சிப்பாடி அருகே உள்ள சின்னதானங்குப்பத்தில் குடியிருப்புகளில் மழை நீர் புகுந்துள்ளது. வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் மழைநீரில் நனைந்தன. காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள சர்வராஜன்பேட்டையில் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கியுள்ளது. நேற்றைய மழை அளவு (மில்லிமீட்டரில்). வானமாதேவி 105, கடலூர் 82.4, பரங்கிப்பேட்டை 71.1, சிதம்பரம் 65, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 63.2, பண்ருட்டி 45.5, புவனகிரி 41, லால்பேட்டை 22,காட்டுமன்னார்கோவில் 18.4, வேப்பூர் 13, விருத்தாசலம் 8 மி.மீ மழை பெய்துள்ளது.

SCROLL FOR NEXT