Regional01

மதுரை மாவட்டத்தில் பலத்த மழை

செய்திப்பிரிவு

மதுரை மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல் இரவு வரை பலத்த மழை பெய்ததால் சாலை களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

குமரி கடலில் நிலவும் வழிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மதுரை மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல் மழை பெய்த் தொடங்கியது.

திருமங்கலம், உசிலம்பட்டி, பேரையூர், திருநகர், திரு வாதவூர், ஒத்தக்கடை, கே.கே.நகர், பெரியார் பஸ் நிலையம், ஆரப்பாளையம், பழங்காநத்தம், அண்ணாநகர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஆண்டாள்புரம், டிவிஎஸ் நகர், மாட்டுத்தாவணி உட்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. பல இடங்களில் வாகனப் போக்குவரத்து ஸ்தம் பித்தது. மின் விநியோகமும் பாதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT