கம்பீரமான பெரிய கடா மீசை யும், வாட்ட சாட்டமுமான கிராமத்து உடல்வாகுடன் திரைப்படங்களில் வலம் வந்த நடிகர் தவசியை தமிழகத்தில் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ‘கிழக்கு சீமையிலே’ திரைப்படத்தில் தொடங்கி, தற்போது நடிகர் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படம் வரைக்கும் ஏராளமான கிராமப் பாங்கான குணச்சித்திர வேடங்கள், நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், கொம்பன் படம் இவரை பட்டி தொட்டிகள் வரை அடையாளப்படுத்தியது.
இவர் தற்போது புற்று நோயால் பாதிக்கப்பட்டு மதுரை சரவணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மெலிந்த உடலுடன் ஆளே அடையாளம் தெரியாத அள வுக்கு மாறியுள்ளார். அவர் வெளி யிட்டுள்ள ஒரு வீடியோவில் சிகிச் சைக்குப் பணம் இல்லாமல் திண் டாடுவதாகவும், உதவுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.