Regional01

அரவக்குறிச்சியில் 69 மில்லி மீட்டர் மழை பதிவு

செய்திப்பிரிவு

கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினமும் நேற்றும் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம்(மில்லி மீட்டரில்): அரவக்குறிச்சி 69, க.பரமத்தி 37.60, அணைப்பாளையம் 8, பஞ்சப்பட்டி 7.8, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் தலா 6, கரூர், மாயனூர் தலா 4.20, தோகைமலை 3.

திருச்சி மாவட்டத்தில் நேற்று மாலை ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.

மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக பொன்னணியாறு அணைப் பகுதியில் 27.20 மிமீ மழை பதிவாகியது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம்(மில்லி மீட்டரில்):

கொப்பம்பட்டி 22, சமயபுரம் 13.20, தேவிமங்கலம் 13, மருங்காபுரி 10.20, கோவில்பட்டி 7.20, மணப்பாறை 7.60, வாத்தலை அணைக்கட்டு, துவாக்குடி தலா 7, முசிறியில் 6.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் இம்மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் நேற்று காலை வரை பதிவான மழை விவரம் (மில்லி மீட்டரில்): செட்டிகுளம் 10, பாடாலூர் 5, அகரம் சீகூர் 6, லப்பைகுடிக்காடு 30, புதுவேட்டகுடி 7, பெரம்பலூர் 59, எறையூர் 34, கிருஷ்ணாபுரம் 10, தழுதாழை 20, வி.களத்தூர் 12, வேப்பந்தட்டை 28.

SCROLL FOR NEXT