Regional02

சாக்குமூட்டையில் பெண் சடலம்

செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே வெண்ணாற்றில் ஒளிமதி என்ற இடத்தில் நேற்று மாலை ஒரு சாக்கு மூட்டை கரை ஒதுங்கியது. அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின்பேரில், நீடாமங்கலம் போலீஸார் அங்கு சென்று, சாக்கு மூட்டையைப் பிரித்து பார்த்தனர்.

அதில் கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போலீஸார், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT