Regional01

மணல் கடத்தல் புகார் நெல்லையில் சிறப்புக்குழு ஆய்வு

செய்திப்பிரிவு

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மறுகட்டமைப்பு செய்ய கடந்த2018-ம் ஆண்டு பணி தொடங்கப்பட்டது. பேருந்து நிலையத்தில் அஸ்திவாரம் தோண்டும்போது எடுக்கப்பட்ட மணல் கடத்தப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் சுடலைக்கண்ணு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

புகார் தொடர்பாக ஆய்வு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்க, ஓய்வுபெற்ற புவியியல் மற்றும்சுரங்கத்துறை அதிகாரி கலைவாணன் தலைமையில் வழக்கறிஞர்கள் அடங்கிய விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை கமிஷனைச் சேர்ந்த குழுவினர் திருநெல்வேலி சந்திப்பு பழைய பேருந்து நிலையத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

SCROLL FOR NEXT