அடைக்கலப்பட்டணம் எஸ்எம்ஏ பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. 
Regional02

எஸ்எம்ஏ பள்ளியில் குழந்தைகள் தின விழா

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே அடைக்கலப்பட்டணத்தில் உள்ள எஸ்எம்ஏ மெட்ரிக் பள்ளி மற்றும் எஸ்எம்ஏ நேஷனல் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.

பள்ளி முதல்வர் மகேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார். அகாடமிக் இயக்குநர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.மாணவர்களுக்கு இணையவழியில் போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவ, மாணவிகள் லட்சிகா, மேரி சன்ஷிகா, ஜெமிரிசோனா, பிரியதர்ஷினி, ராம கிஷோர், தஸ்வின், ரக்ஸிதா, மோகனவரதன், வாசுதேவ், இப்ரா, அப்னா, நிரஞ்சனா, ஜெய்ஹர்சித், ஜெர்வின், ரகுவசந்த், தர்ஷன் அபிநவ் சஞ்சய், கண்ணன், சஞ்சய் மாதவன் ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்றனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர் சரளா ராமச்சந்திரன், ஒருங் கிணைப்பாளர்கள் பாகிரதி, கலைச்செல்வி மற்றும் ஆசிரி யர்கள் செய்திருந்தனர். 

SCROLL FOR NEXT