சுந்தரவதனம் 
TNadu

சசிகலா சகோதரர் காலமானார்

செய்திப்பிரிவு

சசிகலாவின் மூத்த சகோதரர் சுந்தரவதனம் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் அதிகாலை (நவ.14) காலமானார்.

தஞ்சாவூர் மேல வஸ்தாசாவடியைச் சேர்ந்தவர் சுந்தரவதனம்(78). இவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் மூத்த சகோதரர். ஸ்டேட் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், சில ஆண்டுகளாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சென்னையில் நேற்று முன்தினம் காலமானார். இவரது உடல் சென்னையிலிருந்து தஞ்சாவூர் மேல வஸ்தாசாவடிக்குக் கொண்டு வரப்பட்டு, நேற்று பிற்பகல் அருகிலுள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

இவரது உடலுக்குச் சகோதரர் வி.திவாகரன், அமமுக பொதுச் செயலாளரும், மருமகனுமான டிடிவி.தினகரன் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

சுந்தரவதனத்தின் மனைவி சந்தானலட்சுமி 2017-ல் காலமானார். இவர்களுக்கு பிரபாவதி, அனுராதா ஆகிய 2 மகள்களும், மருத்துவர் வெங்கடேஷ் என்ற மகனும் உள்ளனர்.

SCROLL FOR NEXT