Regional01

சிறை கைதி உயிரிழந்த விவகாரம்காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்

செய்திப்பிரிவு

காடாம்புலியூரைச் சேர்ந்த செல்வமுருகன் (39) என்பவரை திருட்டு வழக்கில் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர் விருத்தாசலம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர்உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி பிரேமா,கணவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகிறார். தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் நெய்வேலிடவுன்ஷிப் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம்கடலூர் முதுநகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். குறிஞ்சிப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் நெய்வேலி டவுன்ஷிப் புக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை விழுப்புரம் சரக டிஐஜி எழிலரசன் நேற்று பிறப்பித்தார்.

SCROLL FOR NEXT