கடலூரில் ஊரக வளர்ச்சித் துறையில் சாலைப் பணிகள் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. 
Regional02

கடலூர் மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் பல்வேறு திட்டங்கள் வாயிலாக செயல்படுத்தப்படும் சாலைப் பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்ததாவது:

சாலைப் பணிகளை தொடங் காமல் இருந்தாலோ, காலதாமதம் செய்தாலோ அல்லது தரமற்ற சாலை அமைக்கும் பட்சத்தில் ஒப்பந்ததாரர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சாலைப்பணிகளில் ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டால் சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வரையறுக்கப்பட்டுள்ள காலத் திற்குள் சாலைகளை அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்தார். கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT