திருமங்கலம் அருகிலுள்ள பெரிய வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார்(30). பால் வியாபாரி. இவர், தனது மகன் நிஷாந்துடன்(3) உசிலம்பட்டியிலுள்ள மருத்துவமனைக்கு இரு சக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் சென்றார். அதேநேரம், வகுரணியைச் சேர்ந்த அசோக், அவரது நண்பர் சமாதானம் ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் திருமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். சிந்துப்பட்டி அருகே முன்னால் சென்ற தனியார் பேருந்து ஒன்றை முந்திச் செல்ல அசோக் முயன்றார்.
அப்போது, எதிரில் வந்த முத்துக்குமார் மீது மோதினார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த முத்துக்குமாரும், நிஷாந்தும் தனியார் பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அசோக், சமாதானம் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து சிந்துப்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.