Regional01

பிஎப் ஓய்வூதியர் உயிர் வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க புதிய வசதிகள் அறிமுகம்

செய்திப்பிரிவு

வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியர்கள் உயிர் வாழ்ச் சான்றிதழ் சமர்ப்பிக்க புதிய வசதிகள் அறி முகம் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக மதுரை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் விக்னேஸ்வரன் கூறியதாவது: வருங்கால வைப்பு நிதி அலுவலகம் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் உயிர் வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஒவ்வொரு ஆண்டும் நவ., டிச., மாதங்களில் வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களுக்கு வருகின்றனர். கரோனா தொற்றால் ஓய்வூதியர்கள் அனைவரும் பாதுகாப்பாக தாங்கள் வசிக்கும் இடத்தின் அருகிலேயே உயிர் வாழ் சான்றிதழைச் சரி பார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி ஓய்வூதியதாரர்கள் மின்னணு உயிர்வாழ் சான்றிதழை நவ., டிச. மாதங்களில் மட்டும் இல்லாமல் தங்களின் வசதிக்கு ஏற்ப அனைத்து மாதங்களிலும் சமர்ப்பிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு தாக்கல் செய்யப்படும் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்ட மாதத்திலிருந்து ஓராண்டுக்கு செல்லுபடியாகும். ஓய்வூதியதாரர்கள் தங்கள் மொபைல் போன் எண், வங்கிக் கணக்குப் புத்தகம், ஓய்வூதிய ஆணை எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஓய்வூதியம் பெறும் வங்கிகள்/ அருகில் உள்ள தபால் அலுவலகங்கள், இ-சேவை மையங்களில் உயிர் வாழ் சான் றிதழைப் பதிவு செய்யலாம்.

தபால் அலுவலகங்களில் தபால்காரரிடம் பதிவு செய்யும் போது அதற்கு ரூ.70 சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும். மொபைல் போன்களில் UMANG APP வழியாகவும் மின்னணு உயிர் வாழ் சான்றிதழைச் சமர்ப் பிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT