கன்னிவாடி காவல்நிலையம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர். 
Regional02

கன்னிவாடி அருகே பா.ஜ.க. கொடிக் கம்பம் சேதம் காவல்நிலையம் முன் கட்சியினர் போராட்டம்

செய்திப்பிரிவு

கன்னிவாடி அருகே புதுப்பட்டியில் பாஜக கொடிக் கம்பத்தை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி அக்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

கன்னிவாடி அருகே புதுப்பட்டியில் அமைக்கப் பட்டிருந்த பாஜக கொடிக்கம்பம் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டிருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பாஜக தலைவர் தீமையா, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் தனபாலன் உள்ளிட்டோர் கன்னிவாடி காவல்நிலையத்துக்கு ஊர்வலமாகச் சென்று கட்சிக் கொடிக் கம்பத்தைச் சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி. அசோகன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார்.

SCROLL FOR NEXT