புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணி யன்(35), இவரது நண்பரான சென்னியவிடுதியைச் சேர்ந்த காத்தலிங்கம்(43) ஆகிய இருவரும் வேப்பங்காடுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு நேற்று முன் தினம் வீட்டுக்கு திரும்பிக் கொண்டி ருந்தனர்.
அப்போது ஊரணிபுரம், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் லட்சு மணன்(21), அதே பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன்(23), எத்தீஸ்(22) ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள் மீது பட்டுவிடுதி சாலையில் எதிர்பாராதவிதமாக மோதியதில் அந்த இடத்திலேயே சுப்பிரமணியன் இறந்தார். பலத்த காயமடைந்த லட்சு மணன் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். காத்தலிங்கம், பரமேஸ்வரன், எத்தீஸ் ஆகிய 3 பேரும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாபநாசம் அருகே பண்டாரவாடை பிரதான சாலை பெட்ரோல் பங்க் அருகில் நேற்று முன்தினம் மாலை பண்டாரவாடை கிராமத்தைச் சேர்ந்த ராஜா மகன் ஆகாஷ் (17) மற்றும் இருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிரே மயிலாடுதுறை நோக்கிச் சென்ற வேனில் மோதியதில், ஆகாஷ் அந்த இடத்தில் உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்ற இருவரும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.
இதேபோல, மயிலாடுதுறையை அடுத்த மணல்மேடு முட்டம் பாலத் தின் வழியாக வக்காரமாரியைச் சேர்ந்த 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.
பாலத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டு வழியாக மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த காரும் ஒரேநேரத்தில் நுழைந்தபோது பேரிகார்டு இடித்து மோட்டார் சைக்கிளும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளில் வந்த வக்காரமாரியைச் சேர்ந்த செல்வம்(30), புருஷோத்தமன்(25) ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற கோவிந்தராஜ் (30) என்பவர் பலத்த காயத்துடன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மணல்மேடு போலீஸார் கார் ஓட்டுநரான மீன்சுருட்டியைச் சேர்ந்த அனந்தகிருஷ்ணனை கைது செய்தனர்.