தி.மலை மாவட்டம் கீழ்வணக்கம்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளி ஒருவரிடம் புதிய வீட்டை ஒப்படைத்த அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன். 
Regional01

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.8.55 கோடி மதிப்பீட்டில்250 பசுமை வீடுகள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.8.55 கோடி மதிப்பில் இருளர் மற்றும் நரிக்குறவர் குடும்பங்களுக்கு 250 பசுமை வீடுகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நேற்று வழங்கினார்.

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, பழங்குடியினர் நலத் துறை சார்பில், பசுமை வீடுகள் திட்டம் மற்றும் பிரதம மந்திரியின் குடியிருப்புத் திட்டத்தின் கீழ் இருளர் மற்றும் நரிக்குறவர்களுக்காக ஆரணி அடுத்த தச்சூர் கிராமத்தில் 99 வீடுகள், தெள்ளார் அடுத்த பொன்னூர் கிராமத்தில் 49 வீடுகள், திருவண்ணாமலை அடுத்த கணத்தம்பூண்டி கிராமத்தில் 67 வீடுகள், தண்டராம் பட்டு அடுத்த கீழ்வணக்கம்பாடி கிராமத்தில் 35 வீடுகள் என ரூ.8.55 கோடி மதிப்பில் 250 வீடுகள் கட்டப்பட்டன. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. பயனாளிகளிடம் வீடுகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஒப்படைத்தார்.

பெட்ரோல் பங்க் திறப்பு

SCROLL FOR NEXT