Regional03

தேர்தல் நடைமுறைகளில் மக்கள் பங்கேற்கும் விதமாக போட்டிகள் இந்திய தேர்தல் ஆணையம் அழைப்பு

செய்திப்பிரிவு

‘தேர்தல் நடைமுறைகளில் பொதுமக்கள் பங்களிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக போட்டிகள் நடத்தி பரிசு வழங்க இந்தியத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது,’ என சேலம் ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளதாவது:

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம், 2021 மற்றும் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தேர்தல் நடைமுறைகளில் பொதுமக்களின் பங்கேற்பை ஊக்கப்படுத்தும் விதமாக மாநில அளவில் தேர்தல் தொடர்பான இணையவழி போட்டிகளை அறிவித்துள்ளது. தமிழக தலைமைத் தேர்தல் அலுவலகத்தின் இணைய தளம் www.elections.tn.gov.in மூலம் சுவரொட்டி வரைதல், கவிதை மற்றும் பாடல்கள் எழுதுதல், வாசகம் எழுதுதல் தலைப்புகளில் நடக்கும் போட்டிகளில் ஆர்வமுள்ள பொதுமக்கள் பங்கேற்கலாம்.

தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலக தேர்தல் இணையதளத்தில் ஆன் லைன் மற்றும் வெப் போர்ட்டல் மூலமாக பங்கேற்கலாம்.

இப்போட்டிகள் அனைத்தும் இணைய தளம் மூலமாக மட்டுமே நடத்தப்படும். இந்தியாவில் தேர்தல் மற்றும் 100 சதவீதம் வாக்காளர் பட்டியல் பெயர் பதிவு மற்றும் வாக்குப்பதிவினை அடைவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை முக்கிய அம்சமாக கொண்ட கருத்துருவாகும். இப்போட்டியில் 18.11.2020 மாலை 5 மணி வரை பங்கேற்கலாம். வெற்றியாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000 வழங்கப்படும்.

மேலும், விவரங்கள் தலைமைத் தேர்தல் அதிகாரி www.elections.tn.gov.in அலுவலகத்தின் இணைய தள அறிவிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT