Regional02

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள பணிப் பார்வையாளர், இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்குரிய விண்ணப்பப் படிவத்தை www.tiruvallur.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்திசெய்து, உரிய சான்றுகளின் நகல்களுடன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி), ஆட்சியர் அலுவலகம், திருவள்ளூர் - 602001 என்ற முகவரியில், நேரிலோ, பதிவஞ்சல் மூலமோ வரும் டிசம்பர் 8, மாலை 5.45 மணிக்குள் சேர்ப்பிக்கலாம் என, ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT