தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ஏ.ஜி.எஸ்.ராம்பாபு வெளியிட்ட அறிக்கை:
மதுரை விமான நிலையத்தில் உள்ள 7,500 அடி நீளமுள்ள ஓடுபாதையை 12,500 அடி யாக நீட்டிக்கும் திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. இத்திட்டம் தற் போதுள்ள சுற்றுச்சாலையை பாதிக்காத வகையில், மேலே விமான ஓடுதளமும், கீழே நான்கு வழிச்சாலையும் கடக் கும் வகையில் அமைக்க திட்ட மிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான இத்திட்டத்தை விரைந்து நிறைவேற பிரதமரிடமும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடமும் தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும்.
இத்திட்டத்தை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.