Regional02

ஆலங்குளம் காவல் நிலையம் முற்றுகை

செய்திப்பிரிவு

விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலராக இ.ரவிச்சந்திரன் என்பவர் நியமிக்கப்பட்டார். ஆனால், அடுத்த அரை மணி நேரத்தில் வெம்பக்கோட்டை ஒன்றிய முன்னாள் செயலர் கே.ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டார். இவர்களில் இ.ரவிச்சந்திரன் சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மனின் ஆதரவாளர். அடுத்தாக நியமிக்கப்பட்ட கே.ரவிச்சந்திரன் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் ஆதரவாளர். இதனால் இரு தரப்பினரிடையே ஆலங்குளத்தில் மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸார் பொய் வழக்கு தொடருவதாகக் கூறி, ராமுத்தேவன்பட்டியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆலங்குளம் காவல் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

SCROLL FOR NEXT