மதுரை அருகே சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த இளைஞர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பேரையூர் பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜ் (22). கடந்த 12-ம் தேதி இவரது வீட்டின் அருகே விளையாடிய 10 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் ரீதியில் தொந்தரவு செய்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர், சாப்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வரதராஜ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.