Regional01

தூத்துக்குடி கோட்ட அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் சிறப்பு முகாம்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ந.ஜெ.உதயசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் உள்ள அஞ்சல் நிலையங்களில் இந்த மாதம் (நவம்பர்) முழுவதும் ஆதார் சேவைகளுக்கான சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

தூத்துக்குடி தலைமை தபால் அலுவலகம், மேலூர், சிதம்பரநகர், மில்லர்புரம், வடக்கூர், நியூகாலனி, முத்தையாபுரம், துறைமுகம், தூத்துக்குடி பழைய பஸ் நிலைய தபால் அலுவலகம், ஆழ்வார்திருநகரி, ஆனந்தபுரம், ஆறுமுகநேரி, ஆத்தூர், ஏரல், காயல்பட்டினம், காயாமொழி, கொம்மடிக்கோட்டை, கோரம்பள்ளம், குலசேகரன்பட்டினம், குரும்பூர், மெஞ்ஞானபுரம், முதலூர், முடிவைத்தானேந்தல், மூக்குப்பீறி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், படுக்கப்பத்து, பரமன்குறிச்சி, புதியம்புத்தூர், புதுக்கோட்டை, சாத்தான்குளம், சாயர்புரம், செய்துங்கநல்லூர், உடன்குடி, வல்லநாடு ஆகிய அஞ்சல் அலுவலகங்களில் இம்முகாம் நடைபெறுகிறது.

முகாமில் புதிய ஆதார் பதிவுக்கு இலவசம். 5 மற்றும் 15 வயதில் மேற்கொள்ளப்படும் கட்டாய திருத்தங்களான புகைப்படம், கைரேகை, கருவிழி பதிவு ஆகியவை கட்டணம் இல்லாமல் செய்யப்படும். மேலும் முகவரி திருத்தம், செல்போன் எண் மாற்றம், பிறந்த தேதி திருத்தம், பெயர் மாற்றம், போன்ற சேவைகளுக்கு ரூ.50, கைரேகை மறுபதிவு, புகைப்படம் மாற்றம் ஆகிய சேவைகளுக்கு ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். பொதுமக்கள் அனைவரும் இந்த ஆதார் சிறப்பு சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT