தூத்துக்குடியில் பாளையங்கோட்டை சாலையில் உள்ள தற்காலிக காய்கறி சந்தையில் உள்ள கடைகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். 
Regional02

பாளையங்கோட்டையில் 63 மி.மீ பதிவு காலை தொடங்கி இரவு வரை இடைவிடாது பெய்த மழை சாலைகள் உருக்குலைந்தன; சகதிக்காடான மார்க்கெட்டுகள்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்து மழை பெய்ததால், தாழ்வான இடங்களில் பெருமளவு தண்ணீர் தேங்கியது.

மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 63 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. பிற இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): பாபநாசம்- 42, சேர்வலாறு- 34, மணிமுத்தாறு- 25, நம்பியாறு- 7, கொடுமுடியாறு- 15, அம்பாசமுத்திரம்- 29, சேரன்மகாதேவி- 26, ராதாபுரம்- 6.2, நாங்குநேரி- 19.5, களக்காடு- 55.4, மூலக்கரைப்பட்டி- 40, திருநெல்வேலி- 11.

அணைகள் நிலவரம்

தொடர் மழை

தென்காசி

தூத்துக்குடி

இதனால் தூத்துக்குடி நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. சாலைகள், தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

மாநகராட்சி மற்றும் தீயணைப்பு படையினர் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீரை உறிஞ்சிஅகற்றும் பணியில் ஈடுபட்டனர். தீபாவளி பொருட்கள் வாங்க வந்த மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாயினர். உப்பளங்கள் அனைத் தும் தண்ணீரில் மூழ்கின.

கால்வாய், ஓடைகளில் காட் டாற்று வெள்ளம் பெருக்கெடுத்ததால் குளங்கள், ஏரிகளுக்கு தண்ணீர் வரத்தொடங்கியது. இது விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): திருச்செந்தூர் 18, காயல்பட்டினம் 11, குலசேகரன்பட்டினம் 4, விளாத்திகுளம் 0.6, கயத்தாறு 9, கடம்பூர் 9, மணியாச்சி 18, கீழஅரசடி 0.5, சாத்தான்குளம் 5.2, வைகுண்டம் 57, தூத்துக்குடி 21 மி.மீ. மழை பெய்துள்ளது.

கன்னியாகுமரி

SCROLL FOR NEXT