வேலூரில் தொழிலாளர் நல அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் நடத்திய சோதனையில் முறைகேடாக தனி நபர்களை பணியில் அமர்த்தி யிருப்பது தெரியவந்துள்ளது.
தமிழகம் முழுவதும் தொழி லாளர் நலத்துறையின் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை மற்றும் துணை இயக்குநர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் நேற்று முன்தினம் மாலை திடீர் சோதனையை தொடங்கினர். பல இடங்களில் இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது.
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் 2-ம் வட்டம் மற்றும் வள்ளலார் பகுதியில் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அலுவலகங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஏராளமான தீபாவளி இனிப்பு பெட்டிகள், பட்டாசு பெட்டிகளையும் பறிமுதல் செய்தனர். அலுவலகத்தில் இருந்த வர்களின் கையிருப்புப் பணத்தை பறிமுதல் செய்து விசாரித்தபோது, அவர்களின் சொந்தப் பணம் என்பதால் அவர்களிடமே திருப்பிக் கொடுக்கப்பட்டது.
நள்ளிரவு வரை சோதனை
இந்த சோதனை தொடர்பாக விவரங்களை தொழிலாளர் நலத் துறைக்கு விரைவில் அனுப்பி வைப்பதுடன், முறைகேடாக தனிநபர்களை விதிகளை மீறி அரசு அலுவலகங்களில் பணியில் அமர்த்தியது தொடர்பாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்ய முடிவு செய்யப் பட்டுள்ளது.