தொலைக்காட்சிகளில் ஆபாசத்தைப் பரப்பும் விளம்பரங்களை ஒளிபரப்ப உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைசேர்ந்த சகாதேவராஜா என்பவர், உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்து, ஆபாசத்தைப்பரப்பும் வகையிலான கருத்தடைச் சாதனங்கள், பாலியல் மருத்துவங்கள், உள்ளாடைகள், சோப்புகள், ஐஸ்கிரீம், வாசனைத் திரவியங்கள் தொடர்பான விளம்பரங்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டது.
பின்னர், மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.