கடலூரில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் மகளிர் திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 
Regional01

மகளிர் திட்ட செயல்பாடுகள் குறித்து கடலூரில் ஆய்வு

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில்,மகளிர் திட்ட செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. வாழ்வாதாரஇயக்கம், இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட மகளிர் திட்டங்களின் செயல்பாடுகளை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

ஊராட்சி அளவிலான மகளிர் சுய உதவிக் குழு கூட்டமைப்பை வலுப்படுத்துதல், மகளிர் கூட்டமைப்பிற்கு வங்கி கடன் வழங்குதல் ஆகிய பணிகளை சம்மந்தப்பட்ட வங்கியுடன் இணைந்து வரும் டிசம்பருக்குள் முடித்திட வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்தார். மகளிர் திட்ட இயக்குநர் காஞ்சனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT