Regional02

நவ.21-ல் வாக்காளர் சேர்த்தல் சிறப்பு முகாம்

செய்திப்பிரிவு

2021 ஜன.1-ம் தேதியை தகுதிநாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தங்களுக்கான சிறப்பு முகாம் நவ.21, நவ.22, டிச.12, டிச.13 ஆகிய தேதிகளில் நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

அதன்படி சிவகங்கை மாவட் டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தத்துக்கான விண்ணப் பங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பெற உள்ளனர். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.

SCROLL FOR NEXT