Regional01

தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடை வழங்கல்

செய்திப்பிரிவு

நாமக்கல் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் விழா நடைபெற்றது. நகராட்சி ஆணையர் பி.பொன்னம்பலம் தலைமை வகித்தார்.

நாமக்கல் எம்எல்ஏ கே.பி.பி. பாஸ்கர் பங்கேற்று நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 400 பேருக்கு சீருடை வழங்கிப் பேசினார். மேலும், கரோனா நோய் தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபடும்படியும் அறிவுறுத்தினார்.

நிகழ்ச்சியில் நகராட்சிப் பொறியாளர் ஏ. ராஜேந்திரன், தூய்மை அலுவலர் கே. சுகவனம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT