ஆத்தூரில் உரிமம் இன்றி மளிகை கடையில் பட்டாசு விற்பனை செய்தவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பட்டாசு விற்பனை செய்த 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
ஆத்தூர் டவுன் காவல் நிலைய எஸ்ஐ நிர்மலா தலைமையிலான போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆத்தூர் ராணிப்பேட்டை பகுதியில் உள்ள மளிகைக் கடையில் உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்த சக்திவேல் (43) என்பவரை கைது செய்தனர். மேலும், அங்கிருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
ஓமலூர் அடுத்த காமலாபுரத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகளில் போலீஸார் சோதனை நடத்தினர்.
அப்போது, ஒரு கடையில் அங்கு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பட்டாசு விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து, கடை உரிமையாளர்கள் முருகன் (32), வையாபுரி (60) ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.