திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் களை ஒரே நேரத்தில் இடமாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் பெண் ஆட்சியராக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதத்திலிருந்து பொறுப்பு வகித்த ஷில்பா பிரபாகர் சதீஷ், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதில், தமிழ்நாடு திறன்மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநர் வி.விஷ்ணு திருநெல்வேலி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப் பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே, சேரன்மகாதேவியில் சார் ஆட்சியராகவும், கன்னியாகுமரி மாவட்டம் இனயம் துறைமுகத்தை உருவாக்குவதற்கான சிறப்பு அலுவலராகவும் பணிபுரிந்தவர்.
தென்காசி
தூத்துக்குடி
தமிழக சட்டப்பேரவை தேர்தலை யொட்டி பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டு வரும் நிலையில், இந்த 3 மாவட்ட ஆட்சியர்களும் மாற்றப்பட்டதாக தெரிகிறது.