Regional02

அவிநாசியில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

செய்திப்பிரிவு

அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசிவட்டாட்சியர் அலுவலகத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றங்கள் நடைபெறுவதாக, மாவட்ட ஊழல் மற்றும் லஞ்சஒழிப்புத் துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து காவல் துணைக் கண்காணிப்பாளர் தட்சிணாமூர்த்தி தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று மாலை திடீரென அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

வட்டாட்சியர் அறை மற்றும் பிற அலுவலர்களின் அறைகளிலும் இடங்களில் இரவு வரை சோதனை நடந்தது. இதில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், சோதனை முடிவில் அதன் விவரங்கள் தெரிவிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தீபாவளி பண்டிகை வரவுள்ள நேரத்தில், தற்போது வட்டாட்சியராக பணி செய்து வரும் சாந்திக்கு மாற்றாக ப.ஜெகநாதன் என்பவர் நேற்று புதிதாக அறிவிக்கப்பட்ட நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடைபெற்றுள்ளது, குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT