சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் விசாரணை மதுரை நீதிமன்றத்தில் தொடங் கியது. காவல் ஆய்வாளர் தர் உட்பட 9 பேருக்கு குற்றப் பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த ஜூன் 19-ல் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் போலீ ஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந் தனர்.
இதையடுத்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் தர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 10 பேரை சிபிஐ போலீஸார் கைது செய்தனர். இதில் பால்துரை என்பவர் கரோனாவால் உயிரி ழந்தார். தர் உட்பட 9 பேரும் மதுரை மத்திய சிறையில் அடை க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய் தது. இந்த வழக்கின் விசாரணை மதுரை நீதிமன்றத்தில் முதன்மை நீதிபதி வடிவேல் முன்னிலையில் நேற்று தொடங்கியது.
இதையடுத்து தர் உட்பட 9 பேரும் நீதின்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப் பட்டனர். 9 பேருக்கும் 2027 பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங் கப்பட்டது. காவல் ஆய்வாளர் தர், “சிறையில் முதல் வகுப்பு வசதி வழங்கவும், வழக்கறிஞரை சந்திக்கவும் அனுமதி வழங்க வேண்டும்” என நீதிபதியிடம் தெரிவித்தார்.
அடுத்த விசாரணையை டிச.10-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.