Regional02

விடுப்பு ஒப்படைப்பு சம்பளம் வழங்கக் கோரி ஆவின் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஓய்வுபெற்றோர் நலச்சங்கத்தினர்

செய்திப்பிரிவு

விடுப்பு ஒப்படைப்பு சம்பளம் வழங்கக்கோரி ஓய்வு பெற்றோர் நலச்சங்கத்தினர் மதுரை ஆவின் அலுவலகத்தை நேற்று முற்று கையிட்டனர்.

மதுரை ஆவின் நிர்வாகத்தில் பணியாற்றிய முதுநிலை பணி யாளர்கள், தொழில்நுட்ப பிரி வினர் மற்றும் ஓட்டுநர் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றோருக்கு விடுப்பு ஒப்படைப்பு சம்பளம் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் ததில் கடந்த 1.1.90-ல் இருந்து ஓய்வு பெற்றோருக்கு விடுப்பு ஒப்படைப்பு சம்பளத் தொகை வழங்குமாறு உத்தரவிடப்பட்டது. அதனடிப்படையில் 12.12.2017-ல் ஆணையர் விடுப்பு ஒப்படைப்பு சம்பளம் வழங்குமாறு ஆவின் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். மற்ற ஆவின் நிர்வாகங்களில் விடுப்பு ஒப்படைப்புச் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், மதுரை ஆவின் நிர்வாகத்தில் விடுப்பு ஒப்படைப்பு சம்பளம் வழங்குவதில் தாமதம் நீடிக்கிறது.

எனவே விரைந்து வழங்க நட வடிக்கை எடுக்குமாறு ஆவின் ஓய்வு பெற்றோர் நலச் சங்கத்தின் தலைவர் பாண்டி, செயலாளர் மாரியப்பன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகை யிட்டனர். பின்னர், பொதுமேலாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

சங்கத்தின் செயலாளர் மாரியப்பன் கூறுகையில், நீதிமன்றம், ஆணையர் உத்தரவிட்டும் விடுப்பு ஒப்படைப்பு சம்பளம் வழங்கவில்லை. 1990-லிருந்து 2000-ம் ஆண்டு வரை ஓய்வு பெற்றவர்களுக்கு விடுப்பு ஒப்படைப்பு சம்பளமாக ரூ. 5,000-லிருந்து 10 ஆயிரம் ரூபாய்க்குள்தான் வரும். அதைக்கூட வழங்காமல் இழுத்தடிக்கின்றனர் என்றார்.

SCROLL FOR NEXT