Regional01

மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

செய்திப்பிரிவு

கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் ஆகிய மீன்பிடி இறங்கு தளங்களில் இருந்து மீனவர்கள் நேற்று மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை அனுமதி அளிக்கவில்லை. இதனால் 450 விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.

SCROLL FOR NEXT