Regional01

ஊழல் தடுப்பு போலீஸார் சோதனை

செய்திப்பிரிவு

அரியலூர் பேருந்து நிலையம் அருகே தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மாவட்ட தோட்டக்கலை தகவல் மற்றும் பயிற்சி மையம் உள்ளது. இந்தக் கட்டிடத்திலேயே மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகத்துக்கு நேற்று மாலை வந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு டிஎஸ்பி சந்திரசேகர் தலைமையிலான போலீஸார், அலுவலகத்தின் கதவை மூடிவிட்டு, அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில், அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத ரூ.61,000 ரொக்கம் கைப் பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT